தமிழ்நாடு போக்குவரத்து




போக்குவரத்து :

✇ போக்குவரத்து என்ற சொல் ஆட்களும், பொருட்களும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிப்பதாகும். இப்போக்குவரத்துத் துறை பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

✇ தமிழ்நாட்டில் மிகவும் வளர்ச்சி பெற்ற, அடர்த்தியான, நவீன போக்குவரத்துக் கட்டமைப்புகள் அமைந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார்துறை போக்குவரத்து அமைப்புகள் அந்தந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவு செய்கின்றன.

✇ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் (Tamilnadu State Transport Corporation - TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத்துறையின் கீழ் இயங்கும் பேருந்துகள் முக்கியமாக பொதுமக்கள் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு உள்ளேயும், மற்ற மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டிலிருந்து பேருந்துகளை இயக்குகிறது.


போக்குவரத்து சேவைகள் :

☣ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நகர் மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை வழங்குகிறது. மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான அளவிற்கு பேருந்துகளை இயக்குகின்றன.

நிர்வாக அமைப்பு :

☢ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை :

☞ மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம்.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர்.
☞ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்.


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் :

☢ தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்குவதற்காக முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 15ந்து, 1975ம் ஆண்டு சென்னையிலிருந்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டது.

☢ அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC) தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத்துறை ஆகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறை 300கிமீ-க்கு அதிகமான தூரம் உள்ள வழித்தடங்களில் இந்த துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாகவும் இருக்கின்றன.


மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னை :

☣ மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னையானது (Metropolitan Transport Corporation - MTC) சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் மொத்தம் 3,365 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டுமே நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி :

☣ திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளில் இருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை :

☣ மதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் :

☣ கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் :

☣ சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் :

☣ விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் :

☣ புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், இராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், கரூர், பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.







தொடர்புடையவை

சாலை போக்குவரத்து
logo