மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம்


✇ மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் அவர்களின் உடல் சார்ந்த பிரச்சினைக்கு ஏற்ப எளிதில் இயக்கும்படியாக வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

✇ நடக்க இயலாதவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்களில் அவர்கள் இயக்குவதற்கு ஏற்றவாறு கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

✇ காது கேளாமை மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் வாகனத்தில் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

✇ ஏனெனில் அவர்களால் பின்னால் வரும் வாகனங்களின் ஒலியைக் கேட்க இயலாது என்பதால் அவர்களுடைய வாகனத்தில் கட்டாயம் டேஷ் போர்டு சிக்னல் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தல் அவசியம்.

✇ அந்த வாகனம், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும்.







logo