ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால்?

✍ ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், ஓட்டுநர் உரிமத்தை தொலைத்த நபர் முதலில் காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும்.

✍ காவல் அதிகாரி புகார் படிவத்தின் ஒரு பகுதியை ஓட்டுநர் உரிமத்தை தொலைத்த நபரிடம் வழங்குவார்.

✍ காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் படிவ நகலின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ. 25 வசூலிக்கப்படும்.

✍ வாக்குமூலம் எழுதப்பட்ட புகார் படிவத்தின் நகலை காவல் அதிகாரியிடம் இருந்து தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

✍ ஓட்டுநர் உரிமம் கிடைக்காத பட்சத்தில் காவல் அதிகாரி வழங்கும் Non - traceable சான்றிதழுடன் ஓட்டுநர் உரிமம் எண் மற்றும் முகவரி, பிறந்த தேதிக்கான சான்றிதழ்களை இணைத்து, உரிய கட்டணம் செலுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

✍ விண்ணப்படிவ வேண்டுகோளுக்கு சான்றளிப்பதற்கு முன் மோட்டார் வாகன துறையின் அலுவலர், ஓட்டுநர் உரிமத்தை தொலைத்த நபர் அளித்த விண்ணப்பத்தை காவல் அதிகாரி சரிபார்ப்பார்.

✍ ஓட்டுநர் உரிமத்தை தொலைத்த நபர் மோட்டார் வாகன துறையிலிருந்து ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.







logo