எரிபொருள் சிக்கனம்


வாகனங்களில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்கான வழிமுறைகள் :

☞ நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு செல்வதற்கும், குறுகலான சந்துகளில் செல்வதற்கும், பேருந்துகளுக்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை எனவும் இரு சக்கர வாகனம் வைத்திருப்பதற்கான காரணங்கள் ஏராளமாக இருக்கிறது.

☞ ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை ஏறி வருவதை நினைக்கும் போது, பைக்கை விற்று விடலாமா என்று கூட பலர் யோசிப்பது உண்டு.

☞ இரு சக்கர வாகனத்தை விற்று விடுவதாலோ, உபயோகிக்காமல் இருப்பதாலோ மேற்கூறிய சவுகரியங்களை நாம் விட்டுக் கொடுக்க நேரிடும். பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் டூ வீலர்களில் நாம் சிட்டாக பறக்கலாம்.

☞ எரிபொருள் அதிகப்படியாக எரிக்கப்படுவதால் வீணாகும் எரிபொருள் 30 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. சாதாரணமாக 60 கி.மீ ஒரு லிட்டருக்கு கொடுக்கும் வாகனம் ஹைட்ரோ - ஜென் கருவியை பயன்படுத்தும் போது 75 முதல் 80 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது.

☞ வெளியேற்றப்படும் புகையின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்படுவதால் எஞ்சின் ஆயிலின் ஆயுள் 4 மடங்கு அதிகரிக்கிறது.

பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்

✇ முதலில், வாகனத்தை, சர்வீஸ் செய்ய வேண்டும். எண்ணெய் கசிவு நீக்க வேண்டும். மைலேஜ் பரிசோதனை செய்ய வேண்டும்.

✇ வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பது மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.

✇ புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

✇ சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிட வேண்டும்.

✇ காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப வேண்டும். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி (specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.

✇ எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவுகிறது.

✇ வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.

✇ எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள், அடிட்டீவஸ் பயன்படுத்தக் கூடாது.

✇ வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே ஆக்ஸிலேட்ர்களை கொடுக்க வேண்டும். திடீரென அதிகப்படியான ஆக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

✇ பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் ஆக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் பிடிக்கக் கூடாது.

✇ சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்.

✇ தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், பிரேக் பிடிக்கக் கூடாது. எந்நேரமும், கிளட்ச்சில் கால் / கை வைக்கக் கூடாது.

✇ அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை. அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும். சராசரியாக 50-60 கிமீ வேகத்தில் பயணிக்க முயல வேண்டும்.

✇ க்ளட்ச் மீது க்யர் மாற்றும் பொழுது மட்டுமே காலினை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி கியர் மாற்றுவதையும் தவிர்த்தால் நன்மை பயக்கும்.

✇ டூ வீலர்களையும் சரி, காரையும் சரி மிக அதிக வேகத்தில் ஓட்டக் கூடாது (100 கிமீ மேல்). அது நம் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு, பெட்ரோலையும் உறிஞ்சி விடும்.

✇ வாகனத்தை மிக மெதுவாக ஓட்டினாலும் இதே நிலைமைதான். அதனால் மிதமான வேகத்தில் (55 முதல் 60 கிமீ வேகம்) வாகனத்தை ஓட்டுவது நல்லது.

✇ அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் போது வண்டி ஓட்டுவதை ஓரளவு தவிர்க்க முயற்சிக்கலாம். சிக்னல்களில் வண்டி என்ஜினை ஆஃப் செய்து விடுவது பெட்ரோலை சேமிக்க பெரிதும் உதவும்.

✇ வண்டி ஸ்டார்ட் செய்தவுடனேயே ஆக்சிலேட்டரை முறுக்கி சீறி பாயாமல், படிபடியாக வேகத்தை அதிகரிப்பதால் பெட்ரோல் அனாவசியமாக வீணாவதை தடுக்கலாம்.

✇ டயரின் காற்றழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும்.

✇ திடீரென ஆக்சிலேட்டரை அதிகரிக்கவோ, இறக்கவோ கூடாது.

✇ சென்னை போன்ற நகரங்களை பொருத்த வரை, அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய மாற்றங்களை நாளிதழ் வாயிலாகவோ, எப்.எம். ரேடியோக்கள் மூலமாகவோ தெரிந்து வைத்திருக்க வேண்டும் .

✇ நாம் போகும் இடத்துக்கு தெளிவாக ரூட்டை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் அனாவசியமாக சுற்றி பெட்ரோல் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

✇ Tank-ல் தேவையான அளவு பெட்ரோலை நிரப்பினால் போதுமானதாகும். அதிகப்படியாக பெட்ரோல் இருந்தால் ஆவியாகி விடும்.

✇ இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தக் கூடாது.

✇ தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்த வேண்டும்.

✇ எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஹைட்ரோ - ஜென் கருவியின் சிறப்பு அம்சங்கள் :

➞ இக்கருவியை வாகனங்களில் பொருத்துவதன் மூலமாக எரிபொருள் 30 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. சாதாரணமாக 60 கி.மீ ஒரு லிட்டருக்கு கொடுக்கும் வாகனம் ஹைட்ரோ - ஜென் கருவியை பயன்படுத்தும் போது 75 முதல் 80 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கிறது.

➞ எஞ்சின் ஆயிலின் ஆயுள் 4 மடங்கு அதிகரிக்கிறது.

➞ எஞ்சின் ஆயுட்காலம் நீடிக்கிறது.

➞ எஞ்சினின் இழுவைத்திறன் கூடுகிறது.

➞ 60 சதவீதம் வரை நச்சுத்தன்மை வாய்ந்த புகை வெளியேற்றப்படுவது குறைகிறது.

➞ இக்கருவியை பராமரிப்பதற்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் மட்டுமே போதுமானதாகும். 100 CC இருசக்கர வாகனத்தை 53000 கிமீ ஓட்டுவதற்கு ஒரு லிட்டர் தூய வடிநீர் (Distilled Water) போதுமானதாகும்.

➞ இக்கருவியின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

➞ இக்கருவியை எளிதான முறையில் எல்லோராலும் பொருத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ - ஜென் கருவியின் சிறப்புகள் :

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு :
✦ ஆக்சி ஹைட்ரஜன் வாயுவானது அதிகப்படியான எரிபொருளை பிஸ்டன் சிலிண்டரினுள் எரிக்க உதவுவதால் 60 சதவீதம் வரை நச்சுத்தன்மை வாய்ந்த புகை (CO, NOX) வெளியேற்றப்படுவது குறைகிறது.

இயந்திரத்தின் செயல்திறன் அதிகரித்தல் :
✦ ஆக்சி ஹைட்ரஜன் வாயுவானது வாகனத்தின் எஞ்சினை சீரான வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுவதாலும், எஞ்சினுள் உருவாகும் கார்பன் முழுவதும் நீக்கப்படுவதாலும் எஞ்சின் ஆயுட்காலம் நீடிக்கிறது.

பாதுகாப்பானது :
✦ ஹைட்ரோ - ஜென் கருவியானது தேவைப்படும் போது தேவையான இடத்தில் மட்டும் ஆக்ஸி ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளதால் தண்ணீர் மட்டுமே வாகனத்தில் சேமித்து வைக்க வேண்டும். வாயு நிலையில் உள்ள ஆக்ஸி ஹைட்ரஜனை சேமித்து வைக்கக்கூடாது.

எல்லாவகை எரிபொருளுக்கும் ஏற்றது :
✦ இக்கருவியானது எல்லா வகையான எரிபொருளினாலும் (Petrol, Disel, Heavy Oil, Kerosene, Acetylene, Propane and LPG) இயங்கும் இயந்திரங்களில் உபயோகபடுத்தப்படும் வகையிலும் மற்றும் எளிதான முறையில் எல்லோராலும் பொருத்துவதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பராமரித்தல் :
✦ இக்கருவியை பராமரிப்பதற்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் மட்டுமே போதுமானதாகும்.

✦ இக்கருவியானது டூவிலர், கார், லாரி, ஜெனரேட்டர் மற்றும் பாய்லர்களுக்கு ஏற்றவாறு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் என்ற துருப்பிடிக்காத மற்றும் சிறந்த நோபல் உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் ஆயுட்க்காலம் 10 ஆண்டுகள் நீடிக்கும் மற்றும் 99 சதவிகிதம் தூய்மையான ஆக்ஸி ஹைட்ரஜன் வாயும் கிடைக்கின்றது.

✦ இக்கருவி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. எனவே இக்கருவியை உங்கள் வாகனங்களில் பொருத்தி மாசுகட்டுப்பாடு, எரிபொருள் சேமிப்பு மற்றும் எஞ்சின் பாதுகாப்பு என்ற மும்முனைப் பலன்களைப் பெற்று நாட்டையும் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.







logo