இலகுரக வாகனம்


இலகுரக வாகனம் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை:

⚾வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் உரிமம்,வாகனத்தைப் பதிவு செய்த சான்றிதழ்,வரி கட்டியதற்கான சான்றிதழ்,இன்ஷூரன்ஸ் சான்றிதழ் போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ்,அனுமதிச் சீட்டு(பெர்மிட்)போன்றவைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

⚾மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது.

⚾போக்குவரத்து சைகைகள்,விளக்குகள் மற்றும் அறிவிப்புகளை மதித்து செல்ல வேண்டும்.

⚾பாதை மாறும் பொழுது,எச்சரிக்கை விளக்குகள் அல்லது கைகளிலோ சைகைகள் செய்ய வேண்டும்.

⚾செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது.

⚾பாதசாரிகள்,முதியவர்கள்,குழந்தைகள் ஆகியவர்கள் செல்லும் போது கவனத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும்.

⚾அதிக பயணிகளையோ,அதிக சுமையோ ஏற்றக் கூடாது.

⚾இரவில்,மங்கலான வெளிச்சத்தில் செல்லும் பொழுது பார்வை திறனை குறைக்கும் வகையில் உள்ள கருமைநிற கண்ணாடிகள் அல்லது புகை படிந்த கண்ணாடிகள்,லென்சுகள்,சூரிய ஒளி தடுப்பான்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

⚾இலகுரக வாகனம் ஓட்டுபவர்களுக்கு என்று அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டக் கூடாது.

⚾சட்ட விரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.

⚾வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

⚾வாகனத்திலுள்ள ஒலிப்பானை வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது.

⚾சாலைக் குறுக்கீட்டையோ,சாலைச் சந்திப்பையோ,பயணிகள் கடக்கும் இடத்தையோ,திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.மேலும்,அந்த இடங்களில் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேராத முறையில் செல்ல முடியும் என்று அறிந்துகொண்ட பின்பே கடக்க வேண்டும்.

⚾உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் கூடாது.

⚾உபரி இருக்கைகள் அமைத்து வாகனத்தை ஓட்டக்கூடாது.

⚾உங்களின் ஓட்டும் திறமையையும்,சூழ்நிலையை புரிந்துகொள்ளும் தன்மையையும் பாதிக்கும் என்பதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

⚾சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

⚾சரியான இடத்தில் வாகனத்தை செலுத்த வேண்டும்.

⚾கிளட்சை மிதித்து கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.

⚾ 14வயதிற்குட்ட குழந்தைகள் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என சரிபார்க்க வேண்டும்.

⚾களைப்பாக இருக்கும் பொழுது வாகனத்தை ஓட்டினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.எனவே அச்சமயத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.

இரவு நேரங்களில் விபத்துக்களை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

✇நடு இரவிலிருந்து அதிகாலை வரையுள்ள காலத்தில் இயற்கையான எச்சரிக்கை உணர்வுகள் மங்கும் என்பதால் அந்நேரங்களில் நீண்ட தூரா பயணத்தை தவிர்க்க வேண்டும்.

✇இரண்டு மணி நேர பயணத்திற்கு ஒருமுறை15நிமிடங்கள் ஓய்வு எடுத்து பயணத்தை தொடர வேண்டும்.

✇தூக்கம் வருவது போல் உணர்ந்தால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க வேண்டும்.

✇உறக்கம் வருவதை தவிர்க்க15நிமிடம் சிறுதூக்கம்,இரண்டு கோப்பை காபி அருந்துதல்,சுத்தமான காற்றை சுவாசித்தல்,உடற்பயிற்சி,ரேடியோ கேட்டல் போன்றவற்றை செய்தல் சிறிது நேரம் தூக்கத்தை தவிர்க்கலாம்.ஆனால்,இது முழுவதும் தூக்கத்தை தவிர்க்காது.

குழந்தைகள் வாகனத்தில் இருந்தால் கவனிக்க வேண்டியவை:

✇வாகனத்தின் பின்புறம் குழந்தைகளுக்கான தனி இருக்கை இல்லையென்றால் பயணிக்க வேண்டாம்.

✇பாதுகாப்பூட்டும் வசதி கொண்ட கதவுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

✇குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும்.







logo