கனரக வாகனம்


கனரக வாகனம் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை:

✇வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் உரிமம்,வாகனத்தைப் பதிவு செய்த சான்றிதழ்,வரி கட்டியதற்கான சான்றிதழ்,இன்ஷூரன்ஸ் சான்றிதழ் போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ்,அனுமதிச் சீட்டு போன்றவைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

✇சாலையில் இடது ஓரத்தில் வாகனத்தை செலுத்த வேண்டும்.

✇குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம்.

✇சீட் பெல்ட் அணிந்துகொள்ளவும்.

✇ஓவர்டேக் செய்யும்போது அதிக கவனம் தேவை.

✇வளைவுகளில் முந்தாதீர்.

✇சாலை கூடுமிடங்களில் முந்தாதீர்.

✇மேடான சாலைகளில் முந்தாதீர்.

✇இரயில்வே கிராசிங்கில் முந்தாதீர்.

✇பாதசாரிகள் கடக்குமிடங்களில் முந்தாதீர்.

✇பகலில் ஹெட்லைட் போட்டு முந்த முயல்வது ஆபத்தானது.

✇இடதுபுறம் முந்தாதீர்.

✇உங்கள் வாகனத்தின் முன்னும் பின்னும் பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

✇மலைப்பாதையில் ஏறும் போதும்,இறங்கும் போதும் கீழ் கியரைப் பயன்படுத்துங்கள்.

✇வாகனங்களுக்கு வேகத்தடுப்பான்கள் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

✇அதிக வெளிச்சம் தரும் உபரி முகப்பு விளக்குகளை வாகனத்தில் பொருத்தக் கூடாது.

✇பிரேக் பிடித்தால் நிற்கும் தூரம் அறிந்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

✇வாகனத்திலுள்ள ஒலிப்பானை வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது.

✇பச்சை விளக்கு சிக்னல் வந்த பிறகே வாகனத்தை நகர்த்த வேண்டும்.மஞ்சள் விளக்கு சிக்னல் ஒளிர்ந்தால்,சந்திப்பைக் கடக்க முயற்சி செய்ய கூடாது.

✇சாலைக் குறுக்கீட்டையோ,சாலைச் சந்திப்பையோ,பயணிகள் கடக்கும் இடத்தையோ,திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

✇மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டக்கூடாது.

✇தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டக்கூடாது.

✇நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும்.

✇முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

✇தீயணைப்பு வாகனம்,அவசர ஊர்தி,மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

✇வாகன ஓட்டுநர்கள்Uதிருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது.

✇வாகன ஓட்டுநர்கள்Uதிருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ,வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும்.

லாரி ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டியவை:

✇ஓவர் லோடு(சரக்குகள்)ஏற்றிச் செல்லக் கூடாது.

✇சரக்கு வாகனம் ஓட்டுபவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.

✇அதிக உயரமான சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது.

✇அனுமதிக்கு மேல் நபர்களை கேபினில் ஏற்றக்கூடாது.

✇இசை நாடா ஒலியில் கவனம் செலுத்திக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.

✇சரக்குகளின் மேல் ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது.

பாரங்களை இழுத்துச்செல்லும் பொழுது கவனிக்க வேண்டியவை:

✇அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேலே பாரங்களை இழுத்துச் செல்லக் கூடாது.

✇அளவிற்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச் செல்லக்கூடாது.

✇பாரங்கள் வாகனத்தை விட்டு அபாயகரமாக நீட்டிக் கொண்டிருக்க கூடாது.

✇அச்சின் மீது சமமாக பரவும் வகையில் பாரங்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.அங்கும் இங்கும் பிடித்தம் ஏதும் இல்லாமல் அலைந்தால் வேகத்தை குறைத்து சரிசெய்த பின் செல்ல வேண்டும்.

பேருந்து ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டியவை:

⚾போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ்,அனுமதிச் சீட்டு போன்றவறை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

⚾பேருந்துக்கென ஒதுக்கப்பட்ட தடத்தில் பேருந்தினை செலுத்த வேண்டும்.மேலும் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி செல்ல வேண்டும்.ஏற்கனவே ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருக்கும்பொழுது,கடந்து வரும் பேருந்து அதன் பின் நிற்க வேண்டுமே ஒழிய ஒரு போதும் நின்று கொண்டிருக்கும் பேருந்தின் பக்கவாட்டில் நிறுத்தக்கூடாது.

⚾அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

⚾வாகன ஓட்டுநர் குறுக்குச் சாலைகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும்.

⚾பேருந்தில் புட் போர்டுகளில் பயணிகள் பயணம் செய்வதற்கு பேருந்து ஓட்டுநர் அனுமதிக்க கூடாது.

⚾புகைபிடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.

⚾முன் இடது இருக்கைகளில் ஓட்டுநர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.

⚾கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக் கூடாது.

⚾சீருடை,பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக் கூடாது.

⚾முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது.







logo