பேருந்து பயணிகள்


பேருந்து பயணிகள் கவனிக்க வேண்டியவை:

⚾படிக்கட்டில் நின்று பேருந்தில் பயணம் செய்ய கூடாது.

⚾பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பேருந்து ஓடும் போது ஏறவோ,இறங்கவோ கூடாது.

⚾பயணிகள் ஏற,இறங்க வசதியாக பேருந்து நின்ற பிறகே பேருந்தில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டும்.

⚾பேருந்திலும் கூச்சலில்லாமல் அமைதி காக்க வேண்டும்.மேலும் நின்று கொண்டு பயணிக்கும் பொழுது கைப்பிடியை நன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும்.பேருந்து செல்லும் பொழுது படிக்கட்டு அருகிலோ அல்லது உடலின் பிறபாகங்கள் வெளியே நீட்டுவதோ கூடாது.

⚾வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்ய வேண்டாம்.

⚾பேருந்தில் பயணம் செய்யும்போது ஓட்டுநருக்கு இடையூறாக உள்ள இருக்கையில் அமர்வதோ,ஓட்டுநருடன் தேவையில்லாமல் பேசிக்கொண்டோ பயணம் செய்ய கூடாது.

⚾பேருந்திலிருந்து இறங்கும்போது இரு சக்கர வாகனமோ அல்லது சைக்கிளோ வருகிறதா என்று பார்த்த பின் இறங்க வேண்டும்.

⚾பேருந்து பயணத்தின்போது ஜன்னல் வழியாக தலை,கை,கால் ஆகியவற்றை வெளியே நீட்ட கூடாது.

⚾ஒருபோதும் பேருந்திலிருந்து இறங்கியவுடன் பேருந்தின் பின்பக்கத்திலோ அல்லது முன்பக்கத்திலோ சாலையைக் கடக்க முயற்சிக்கக் கூடாது.

பேருந்தில் பயணிக்கும் பொழுது பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:

⚾பயணத்தை தொடங்குவதற்கு அல்லது பயணம் முடித்த பின்னரோ மட்டுமே ஓட்டுநரிடம் தகவல் விசாரிக்க வேண்டும்.பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பக் கூடாது.

⚾உடன் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்காத வகையில் பயணிகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

⚾அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களை தவிர நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.

⚾எச்சரித்த பின்பும் விதிகளை மீறி நடக்கும் பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி விட வேண்டும்.

⚾பேருந்து பயணச்சீட்டினை கட்டாயமாக வாங்க வேண்டும்.அவ்வாறு வாங்க மறுப்பவர்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது.







logo