உத்தரவு சின்னங்கள்

நிறுத்தவும்




வாகனம் அல்லது பாதசாரிகளை நிற்பதற்கு அறிவுறுத்தும் குறியீடாகும். சில சமயம் போக்குவரத்து போலீசாரும் கையால் இந்த பலகையுடன் சைகை காண்பிப்பதும் வழக்கம்.
வழி கொடுக்கவும்




இந்த அடையாளம் போக்கு வரத்து ஓட்டுனருக்கானது. இந்த அறிகுறியை கண்டால் வலதுபுறம் செல்லும் வாகனத்துக்கு வழி கொடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் குறியீடாகும்.
போகத் தடை




இந்த அடையாளம் போக்குவரத்து ஓட்டுநருக்கு இந்த சாலையில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் குறியீடு ஆகும்.
ஒருவழி போகலாம், வருவதற்கு தடை




இந்த அடையாளம் போக்குவரத்து ஓட்டுநருக்கு இந்த சாலையில் போகத்தடை இல்லை ஆனால், வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
ஒருவழி போக தடை, வரலாம்




இந்த அடையாளம் போக்குவரத்து ஓட்டுநருக்கு இந்த சாலையில் போக தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் வருவதற்கு தடை இல்லை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
இரு வழியும் தடை




அனைத்து ரக வாகனங்களும் இச்சாலையில் செல்வதற்கும், வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
மோட்டர் வாகனங்கள் செல்லதடை




இந்த அடையாளம் மோட்டார் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
லாரி செல்லதடை




இந்த அடையாளம் லாரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
மாட்டுவண்டி கைவண்டி செல்ல தடை




இந்த அடையாளம் மாட்டுவண்டி மற்றும் கைவண்டி இந்த சாலையில் செல்ல தடை செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
மாட்டுவண்டி செல்லதடை




இந்த அடையாளம் மாட்டுவண்டி செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
குதிரைவண்டி செல்லதடை




இந்த அடையாளம் குதிரைவண்டி செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
கைவண்டி செல்லதடை




இந்த அடையாளம் கைவண்டிகள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
மிதிவண்டி செல்லதடை




இந்த அடையாளம் மிதிவண்டிகள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
பாதசாரிகள் செல்லதடை




இந்த அடையாளம் பாதசாரிகள் செல்ல தடை செய்யப்பட்ட சாலை என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
வலதுபுறம் திரும்ப தடை




இந்த அடையாளம் எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநர் கட்டாயமாக வலதுபுறம் நோக்கி திரும்ப கூடாது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
இடதுபுறம் திரும்ப தடை




இந்த அடையாளம் எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநர் கட்டாயமாக இடதுபுறம் நோக்கி திரும்ப கூடாது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
திருப்பம் திரும்பத் தடை




இந்த அடையாளம் தடை செய்யப்பட்ட இடங்களிலும், நெரிசலான சாலைகளிலும் கண்டிப்பாக எந்த ஓட்டுநரும் U டர்ன் செய்யக் கூடாது. U டர்ன் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களில் பின்புறக் கண்ணாடியைப் பார்த்து, வலதுபுறம் திரும்புவதற்கான சைகை காட்டி (இண்டிகேட்டர் ஒளிரவிட்டு) பாதுகாப்பாகத் திருப்ப வேண்டும்.
முந்தி செல்லதடை




இந்த அடையாளம் எந்த ஒரு வளைவுகளிலும் மற்றும் மலை பகுதிகளிலும் முந்தி செல்ல கூடாது என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
ஒலி எழுப்பதடை




இந்த அடையாளமானது சாலையின் அருகில் மருத்துவமனை அல்லது கல்விக்கூடம் உள்ளது. அதனால் இவ்விடத்தில் ஒலி எழுப்புதல் கூடாது என்பதை தெரிவிக்கின்றது.
வாகனங்கள் நிறுத்தி வைக்கத் தடை




இந்த அடையாளம் முக்கிய நகரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது நியமிக்கப்பட்ட பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஓட்டுனர் வாகனத்தை தகுந்த இடங்களில் மட்டும் நிறுத்தவேண்டும்.
வாகனங்கள் நிற்க அல்லது நின்று கொண்டிருக்கத் தடை




இந்த அடையாளம் குறியீட்டு போக்குவரத்து நெரிசல்களில் வாகனங்களில் நிற்கவே கூடாது அல்லது நின்று கொண்டு இருந்தால் ஆபத்துகள் அதிகம் என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
வேகவரம்பு (50 கி.மீ.)




இந்த அடையாளம் குறிப்பிட்ட போக்குவரத்து சீரான சாலை இடங்களில் காணலாம். அவற்றில் போக்குவரத்து நெரிசகளில் 50 கி.மீ வேக அளவில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
அகலவரம்பு (2மீ)




இந்த அடையாளம் வாகனத்தின் அகலத்தை குறிக்கிறது. அவற்றில் குறியிட்ட அகலத்திற்கு மேல் உள்ள வாகனம் செல்ல முடியாது.
உயரவரம்பு (3.5 மீ)




இந்த அடையாளம் உயரவரம்பு 3.5 மீ உள்ளே நிர்ணயிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்ள சாலை என்பதை குறிக்கிறது.
நீள வரம்பு




இந்த அடையாளம் வாகனத்தின் நீளத்தைக் குறிப்பிடும். குறிப்பிட்ட நீளத்திற்கு மேல் உள்ள வாகனங்கள் வளைவு தடங்களில், கூர்மையான இடங்களில் அல்லது ஊசி வளைவு தளங்களில் சென்றால் ஆபத்து ஏற்படும் என்பதை குறிக்கிறது.
எடை அளவு (5டன்)




இந்த அடையாளம் பொதுவாக ஒரு பாலம் முன் நிறுவப்படும். இந்த அடையாள வரப்பானது 5 டன் எடை அல்லது அதற்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் மட்டும் இந்த பாலத்தின் மீது கடந்து செல்ல முடியும் என்பதை குறிப்பதாகும்.
ஆக்ஸில் எடை அளவு(4 டன்)




இந்த அடையாளம் பொதுவாக ஒரு பாலம் முன் நிறுவப்படும். இந்த அடையாள வரப்பானது 4 டன் அல்லது அதற்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே இந்த பாலத்தின் மீது கடந்து செல்ல முடியும் என்பதை குறிப்பதாகும்.
வேக வரம்பு முடிவு




இந்த அடையாளம் வேக கட்டுப்பாட்டு எல்லை முடிவுற்றதை காட்டும் குறியீடாகும். இந்த அடையாளம் அல்லது அறிகுறிகளைக் கடந்த பிறகு ஓட்டுனர் மெதுவாகவோ அல்லது கவனமாக அவரது விருப்பத்திற்கு ஏற்ற வேகத்தில் வாகனத்தைச் செலுத்தலாம்.
கண்டிப்பாக இடது புறம் திரும்பவும்




இந்த அடையாளம் கட்டாயம் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அறிவுறுத்தும் குறியீடு ஆகும்.
கண்டிப்பாக நோரக செல்லவும்




இந்த அடையாளத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக நேராக செல்ல வேண்டும் மற்றும் வேறு திசையில் திருப்பினால் தண்டனைக்குரியதாகும்.
கண்டிப்பாக வலது புறம் திரும்பவும்




இந்த அடையாளம் கட்டாயம் வலது பக்கம் திரும்ப வேண்டும் என்பதை அறிவுறுத்தும் குறியீடு ஆகும்.
கண்டிப்பாக நோரக அல்லது வலது புறம் திரும்பவும்




இந்த அடையாளத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக நேராக செல்ல அல்லது வலது புறமாக செல்ல வேண்டும். இடது புறம் செல்ல வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.
கண்டிப்பாக நோரக அல்லது இடது புறம் திரும்பவும்




இந்த அடையாளத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக நேராக செல்ல அல்லது இடது புறமாக செல்ல வேண்டும். வலது புறம் திரும்பி செல்ல வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கண்டிப்பாக இடது புறம் போகவும்




இந்த அடையாளம் பார்த்த பிறகு கண்டிப்பாக இடது புறம் திருப்பம் வருகிறது என்பதை தெரிவிக்கிறது.
கண்டிப்பாக சைக்கிள் பாதையில் செல்லவும்




இந்த அடையாளம் சைக்கிள் பயணிகள் கண்டிப்பாக சைக்கிள் பாதையில் செல்ல வேண்டும் என்பதை தெரிவிக்கின்றது.
கண்டிப்பாக ஒலி கொடுக்கவும்




இந்த அடையாளம் பெரும்பாலும் மலை சாலைகள் கூர்மையான வளைவுகள் செல்லும் போது இருக்கும். இங்கு மோட்டார் வாகனங்கள் கண்டிப்பாக ஒலி எழுப்பிய பின்னரே செல்ல வேண்டும்.
logo