பெற்றோர் கவனிக்க வேண்டியவை



1.பள்ளிப்பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையில் பெற்றோருக்கு அதிக பங்கு உண்டு.

2.பள்ளிகளால் வழங்கப்படும் போக்குவரத்து வசதி பாதுகாப்பானதா?என பெற்றோர்கள் கண்காணித்து உறுதி செய்து கொள்ளவேண்டும்.

3.பள்ளிப்பேருந்து விதிமுறைகளை மீறுகின்றதா என பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.அவ்வாறு நடந்தால் அதனை போக்குவரத்து அதிகாரிகள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

4.பெற்றோர்கள் ஆசிரியர் கூட்டத்திற்கு தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

5.தமது குழந்தைகள் பொதுசாலையை கடக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய போதிய அறிவும்,திறமையும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.தங்கள் குழந்தைகளுக்கு சாலையில் செல்லும் பொழுதும்,கடக்கும் பொழுதும் பேருந்தில் ஏறி இறங்கும் பொழுதும் கடைபிடிக்க வேண்டிய விதிகளை கற்றுத்தர வேண்டும்.

6.தங்கள் குழந்தைகள் வாகனம் ஓட்டுவதற்கான தகுதிகள் இல்லாத பொழுது வாகனத்தை குழந்தைகள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது.

7.பெற்றோர் தங்களுடன் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது,பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

8.பொதுவாக குழந்தைகள் சட்டங்களை மதித்து சமூகத்தில் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதில் குடும்பத்தினரே பெரும் பங்கு வகிக்க இயலும் என்பதை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மனதில் கொள்ள வேண்டும்.

9.குழந்தைகள் மிகச்சிறந்த பார்வையாளர்கள்.எனவே பெற்றோர்கள் சின்ன சின்ன போக்குவரத்து விதிகளையும் எவ்வித உதாசீனமும் செய்யாமல் அவற்றை மதித்து நடக்கும் பொழுது அவர்களும் அவ்வாறே கடைபிடிப்பார்கள்.

நினைவில் கொள்க:

✇குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.







logo