பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியவை



➥பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.எனவே குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை கற்றுத்தர வேண்டும்.

➥சாலை விதிகளை அவர்களை நன்கு அறியச் செய்வதோடு அதன் முக்கியத்துவத்தையும் உணரச் செய்ய வேண்டும்.

➥விபத்துக்களில் பாதசாரிகள்,சைக்கிள் ஓட்டுபவர்கள் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அதன் காரணத்தை விவரித்துச் சொல்ல வேண்டும்.

➥வாகனப்போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழ்நிலை சீர்கேட்டை விளக்க வேண்டும்.மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போதும்,பள்ளி முடிந்து செல்லும் போதும் பாதுகாப்பாக செல்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

➥சாலையில் நடந்து செல்பவர்கள் அல்லது சைக்கிள் ஓட்டுபவர்கள் அல்லது குழந்தைகள் விபத்தில் பாதிக்கப்படும் போது எதனால் விபத்து ஏற்பட்டது என்றும்,விபத்துக்கான காரணத்தைப் பற்றியும் விவரித்து சொல்ல வேண்டும்.

➥குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறும் போதும்,இறங்கும் போதும் கவனிக்க வேண்டும்.

➥பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் குழந்தைகளை கட்டுப்படுத்த ஒரு ஆசிரியர் கண்டிப்பாக பேருந்தில் பயணிக்க செய்தல் வேண்டும்.

➥பள்ளி வாகனங்கள் நிறுத்தும் போது பாதுகாப்பாகவும்,முறையாகவும் நிறுத்த வேண்டும்.

➥நடந்து செல்பவர்களுக்கும்,வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கும் குழப்பம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

➥அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளி வாகனங்களில் ஏற்றக் கூடாது.

➥பள்ளி ஆரம்பிக்கும் முன்பும்,பள்ளி விட்டு செல்லும் போதும்,ஒரு குறிப்பிட்ட நேரம் பள்ளி முன்பாக பணியாளர் ஒருவரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துதல் வேண்டும்.

➥பள்ளி வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வழியில் நிறுத்தப்படும் போது,குழந்தைளை ஒரே இடத்தில் குழுவாக நிறுத்தி பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் அனுப்ப வேண்டும்.

➥கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை பள்ளி வாகனம் கடைபிடிக்கின்றதா என அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும்.

➥ஆசிரியர்கள்,பள்ளி வாகனம் ஏதேனும் பள்ளி குழந்தைகளுடன் செல்லும் போது,விதிகளை மீறி இயக்கப்படுவதை அறிந்தால் உடனே அந்த பள்ளி முதல்வருக்கோ,போக்குவரத்து காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.







logo