மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை



✇மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.

✇மது அருந்தி விட்டு வாகனத்தை மற்றொருவர் துணையுடன் ஓட்டிச் செல்ல வேண்டும்.

✆மது அருந்திவிட்டு வீட்டிற்கு வாகனத்தை ஓட்டி செல்ல இயலாத போது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவருக்கு போன் மூலம் தகவல் கொடுக்க வேண்டும்.

✆மது அருந்துவதற்கு முன்பாகவே நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தகவல் கொடுக்க வேண்டும்.

சாலை விதிகளை மீறுவோருக்கு அரசு விதிக்கும் அபராத விவரங்கள்:

⚖தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.2,000அபராதம் மற்றும்6மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படுகிறது.புதிய சட்டப்படி அபராத தொகை5மடங்கு அதிகரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

⚖மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மீது ஆயிரம் ரூபாய் முதல்4ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

⚖இன்சூரன்ஸ் இல்லாமல் சாலையில் வாகனம் ஓட்டி சென்றால்5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

⚖சாலையில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டினால்2ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது3மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

⚖ஆபத்தை விளைவிக்கும்படி சாலையில் வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ஆயிரம் ரூபாயில் இருந்து5ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

⚖சாலை விதிகளை மீறுவோருக்கான குறைந்த பட்ச அபராத தொகை100ரூபாயில் இருந்து500ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

⚖ 18வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால்,வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.25ஆயிரம் அபராதமும், 3ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.







logo