முதலுதவி


👉 காயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதலுதவி ஆகும்.

👉 விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் அதிகம்பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.

👉 ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14ம் தேதியை உலக முதலுதவி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலுதவியின் குறிக்கோள் :

☢ உயிரைப் பாதுகாத்தல்.

☢ பாதிக்கப்பட்டவரின் நிலைமை மேலும் மோசம் அடையாமல் தடுத்தல்.

☢ பாதிக்கப்பட்டவர் விரைவாக குணமளிக்க முன் ஏற்பாடு செய்தல்.

முதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை :

☮ ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவறு. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.

☮ ஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.

☮ கை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.







logo