முதலுதவிப் பெட்டி


💼 வாகனங்களில் கட்டாயம் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். சில நூறு ரூபாய்கள் மட்டுமே செலவாகும் முதலுதவிப் பெட்டி நம் கைவசம் இருந்தால், விலை மதிப்பற்ற நமது உயிர் பாதுகாப்பாக இருக்கும்.

முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் :

👉 காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்ய துணி இருக்க வேண்டும்.

👉 கட்டுத்துணி மற்றும் பேண்டேஜ் இருக்க வேண்டும்.

👉 நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்து மற்றும் காயத்தை ஆற்றுவதற்கான ஆயின்மெண்ட் இருக்க வேண்டும்.

👉 ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள் இருக்க வேண்டும்.

👉 முக்கோண வடிவில் சுற்றுவதற்கு பேண்டேஜ் இருக்க வேண்டும்.

👉 துணிகளை வெட்ட மற்றும் காயம் பட்ட இடத்தை சுற்றி இருக்கும் முடிகளை வெட்ட நல்ல கத்திரி இருக்க வேண்டும்.

👉 தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களில் போடுவதற்கான கிரீம் இருக்க வேண்டும்.

👉 தெர்மோ மீட்டர் இருக்க வேண்டும்.

👉 காகிதம் மற்றும் பென்சில் இருக்க வேண்டும்.

👉 முறிந்த எலும்பை இணைப்பதற்காக வைத்து கட்டப்படும் சிம்பு அல்லது மர ஸ்கேல் இருக்க வேண்டும்.







logo