அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்


★ முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வாகனத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

★ முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

★ முதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.

★ மற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதன் மூலம், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.

★ ஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ள வேண்டும்.

★ பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

★ பாதிப்பு அடைந்தவருக்கு ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். இந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.


ரத்த ஓட்ட சோதனை:

★ பாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.

சுவாசப் பாதை சோதனை:

★ பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர் நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.

சுவாச சோதனை:

★ பாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

★ இந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

★ ஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.


சி.பி.ஆர். இதய சுவாசமூட்டல்:

★ பாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.

★ பாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.

★ மூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

★ அழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.

★ குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.


மீட்பு சுவாசம்:

★ பாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி, அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.

★ பிறகு உங்களது வாயை நன்கு திறந்து, காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு, அவரது வாயோடு வாய்வைத்து மூடிய பிறகு உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.







logo