எச்சரிக்கை சின்னங்கள்

சாலை வலதுபுறம் வளைவு




இந்த அடையாளம் சாலை வலதுபுறம் வளைந்து உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த குறியீடு வாகனம் ஓட்டுபவர்களுக்கு வேகத்தைக் குறைக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.
சாலை இடதுபுறம் வளைவு




இந்த அடையாளம் சாலை இடதுபுறம் வளைந்து உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த குறியீடு வாகனம் ஓட்டுபவர்களுக்கு வேகத்தைக் குறைக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் உதவுகிறது.
கொண்டை ஊசி வளைவு வலது




இந்த அடையாளம் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படும். இந்த அடையாளம் வாகனம் ஓட்டுபவர்கள் வலதுபுறம் வளைந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.
கொண்டை ஊசி வளைவு இடது




இந்த அடையாளம் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படும். இந்த அடையாளம் வாகனம் ஓட்டுபவர்கள் இடதுபுறம் வளைந்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.
வலதுபுறம் வளைந்து செல்லும் பாதை




இந்த அடையாளம் வலதுபுறத்தில் ஜிக்ஜாக் வளைவு உள்ளது என்பதை தெரிவிக்கிறது.
இடதுபுறம் வளைந்து செல்லும் பாதை




இந்த அடையாளம் இடதுபுறத்தில் ஜிக்ஜாக் வளைவு உள்ளது என்பதை தெரிவிக்கிறது.
சரிவான சாலை ஏற்றம்




இந்த அடையாளம் சாலையில் செங்குத்தான ஏற்றம் வருகிறது என்பதை தெரிவிக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
சரிவான சாலை இறக்கம்




இந்த அடையாளம் சாலையில் சாய்வான இறக்கம் வருகிறது என்பதை தெரிவிக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
முன்னால் குறுகிய சாலை




இந்த அடையாளம் சாலையின் முன்புறம் குறுகலான பாதை வருகிறது என்பதைக் குறிக்கிறது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
முன்னால் அகன்ற சாலை




இந்த அடையாளம் சாலையின் முன்புறம் அகலமான பாதை வருகிறது என்பதை தெரிவிக்கிறது. ஆகவே வாகன ஓட்டுநர்கள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
குறுகிய பாலம்






இந்த அடையாளம் வாகனம் செல்லும் சாலையின் அகலத்தை விட குறைவான அகலம் கொண்ட ஒரு பாலம் வருகிறது என்பதை தெரிவிக்கிறது. ஆகவே வாகனம் ஓட்டுபவர்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
வழுக்கும் வழிப்பாதை






இந்த அடையாளம் சாலையின் முன் வழுக்கும் வழிப்பாதை வருவதைக் குறிக்கிறது. எண்ணெய் அல்லது தண்ணீர் சாலையில் கசிந்து இருப்பதைக் குறிக்கிறது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கப்பி ஜல்லியில் தளர்ந்த சாலை






இந்த அடையாளம் சாலையின் முன்பு சரளைக்கற்கள் நிறைந்த பாதை வருவதை தெரிவிக்கிறது. அதனால் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டிச்செல்ல வேண்டும்.
மிதிவண்டி குறுக்கிடு






இந்த அடையாளம் முக்கிய சாலையுடன் மிதிவண்டி சாலை சந்திக்கிறது என்பதை தெரிவிக்கிறது. ஆதலால் இதர வாகன ஓட்டுநர்கள் இதை கடக்கும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தி கவனமாக செல்ல வேண்டும்.
பாதசாரிகள் குறுக்கிடு




இந்த அடையாளம் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட சாலை ஆகும். இந்த சாலையின் நடுவில் வெள்ளை நிறக்கோடுகள் வரையப்பட்டிருக்கும். அது பாதசாரிகள் நடப்பதற்க்காக பயன்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே இந்த சாலையில் இதர வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகளுக்கு வழிவிட்டு பிறகு தான் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.
பள்ளிக்கூடம்




இந்த அடையாளம் பள்ளிக்கூடம் அருகில் உள்ளது என்பதை குறிக்கிறது. இந்த பகுதியில் செல்லும் போது வாகனத்தை மெதுவாகவே ஓட்டிச்செல்ல வேண்டும்.
ஆட்கள் வேலை செய்கிறார்கள்




இந்த அடையாளம் சாலையை பழுது பார்த்தல் அல்லது சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஆகவே இந்த பகுதிகளில் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும்.
விலங்கு கவனம்




இந்த அடையாளம் சாலையில் கால்நடைகள் செல்லும் என்பதைக் குறிக்கிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் கால்நடைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வாகனத்தின் வேகத்தை குறைத்து ஓட்டிச் செல்ல வேண்டும்.
பாறைகள் உருளும் கவனம்




இந்த அடையாளம் பெரும்பாலும் மலைப்பகுதி சாலைகளில் காணப்படுகிறது. இது சாலையில் பாறைகள் சரிந்து விழலாம் என்பதை எச்சரிக்கிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.
தோணித்துறை




சில நேரங்களில் சாலைகள் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படாத நிலையில் இருக்கும். அவ்வாறு இருக்கும் போது ஆற்றை கடந்து சென்று அடுத்த சாலையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆற்றை படகு மூலம் கடக்கலாம் என்பதற்காக இந்த அடையாளம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
குறுக்குச்சாலை




இந்த அடையாளம் குறுக்குச் சாலை வருகிறது என்பதைத் தெரிவிக்கிறது. எனவே சாலையின் இருபுறங்களிலும் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்.
மத்தியில் செல்கிற இடைவெளி




இந்த அடையாளம் ஒரு சாலையின் தடுப்பான்களில் ஒரு இடைவெளி உள்ளது அதில் U-திருப்பம் எடுப்பதற்கு ஏதுவாக உள்ளது என்பதை காட்டுகிறது. அதனால் ஓட்டுநர்கள் மெதுவாகவும் தகுந்த பாதுகாப்புடனும் பாதையை மாறிச் செல்ல அறிவிக்கிறது.
பக்கவீதி வலது




இந்த அடையாளம் நேராக சென்று கொண்டிருக்கும் சாலையின் வலது புறத்தில் ஒரு சாலை பிரிவதைக் குறிக்கிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் அதை கவனித்து தான் செல்லும் பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.
பக்கவீதி இடது




இந்த அடையாளம் நேராக சென்று கொண்டிருக்கும் சாலையின் இடது புறத்தில் ஒரு சாலை பிரிவதைக் குறிக்கிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் அதை கவனித்து தான் செல்லும் பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.
துண்டித்து இடதும் நேராகவும் போகும் பாதை




இந்த அடையாளம் முன்னால் சாலை Y வடிவத்தில் இரண்டாக பிரிந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாலையில் இடதும் மற்றும் நேராகவும் போகும் சாலை உள்ளது என்பதை தெரிவிக்கிறது.
துண்டித்து வலதும் நேராகவும் போகும் பாதை




இந்த அடையாளம் முன்னால் சாலை Y வடிவத்தில் இரண்டாக பிரிந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாலையில் வலதும் மற்றும் நேராகவும் போகும் சாலை உள்ளது என்பதை தெரிவிக்கிறது.
துண்டித்து இடதும் வலதும் போகும் பாதை




இந்த அடையாளம் முன்னால் சாலை Y வடிவத்தில் இரண்டாக பிரிந்துள்ளது என்பதை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கு சாலையில் வலதும் மற்றும் இடதும் போகும் சாலை என்பதை தெரிவிக்கிறது.
T- சாலை முடிவு




இந்த அடையாளம் முன்னால் சாலை T வடிவத்தில் உள்ளது என்பதை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலையில் நேராக செல்லும் வழி இல்லை என்றும், வலது புறம் மற்றும் இடது புறம் போகும் சாலை மட்டுமே உள்ளது என்பதை அறிவிக்கிறது.
அடுத்தடுத்து இடதுபுறம் மற்றும் வலதுபுறம் வரும் சாலை




இந்த அடையாளம் நேராக செல்லும் சாலையில் அடுத்தடுத்து இடதுபுறம் மற்றும் வலதுபுறம் சாலை வருகிறது என்பதை தெரிவிக்கிறது. இதனை அறிந்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.
அடுத்தடுத்து வலதுபுறம் மற்றும் இடதுபுறம் வரும் சாலை




இந்த அடையாளம் நேராக செல்லும் சாலையில் அடுத்தடுத்து வலதுபுறம் மற்றும் இடதுபுறம் சாலை வருகிறது என்பதை தெரிவிக்கிறது. இதனை அறிந்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.
முன்னால் பெரிய சாலையை கடக்கவும்




இந்த அடையாளம் சாலையின் முன்னால் ஒரு நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளது என்றும் அதில் கனரக வாகனம் மற்றும் வேகமாக செல்லும் வாகனம் செல்லும் என்பதால் கடந்து போகும் போது எச்சரிக்கையுடனும் மெதுவாகவும் செல்ல வேண்டும் என்றும் ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கிறது.
முன்னால் பெரிய சாலை வருகிறது




இந்த அடையாளம் சாலையில் முன்னால் ஒரு நெடுஞ்சாலையை சந்திக்கிறது என்றும் கனரக வாகனம் மற்றும் வேகமாக செல்லும் வாகனம் செல்லும் என்பதால் போகும் போது எச்சரிக்கையுடனும் மெதுவாகவும் செல்ல வேண்டும் என்றும் ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கிறது.
வட்ட சுற்று




இந்த அடையாளம் சாலையில் ஒரு வட்ட சுற்று சுற்றி சலையை கடக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலையில் வாகனங்களை வட்டத்தை சுற்றி சாலையை கடக்க வேண்டும் என்று குறிக்கிறது.
ஆபத்தான பள்ளம்




இந்த அடையாளம் சாலையில் ஆபத்தான பள்ளம் வருகிறது என்று குறிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலையில் வாகனங்களை வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.
மேடுபள்ளச் சாலை




இந்த அடையாளம் சாலையில் வேகத்தடை வர உள்ளது. அதனால் ஓட்டுநர்கள் கவனமா செல்லவும் என்பதை குறிக்கின்றது.
சோதனைச் சாவடி




இந்த அடையாளம் சாலையில் சோதனைச் சாவடி உள்ளது என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம் ஓட்டுநர்கள் சாலையில் வாகனங்களில் செல்லும் போது எவ்வளவு தொலைவில் சோதனைச் சாவடி வருகிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
பாதுகாப்பற்ற ரயில்பாதை (200மீ)




இந்த அடையாளம் சாலையின் குறுக்கே பாதுகாப்பற்ற ரயில்பாதை 200 மீ தொலைவில் வருகிறது என்று குறிக்கிறது. மேலும் இந்த ரயில்பாதையில் காப்பாளர் இல்லை என்று ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
பாதுகாப்பற்ற ரயில்பாதை (50-100மீ)




இந்த அடையாளம் சாலையின் குறுக்கே பாதுகாப்பற்ற ரயில்பாதை 50-100 மீ தொலைவில் வருகிறது என்று குறிக்கிறது. மேலும் இந்த ரயில்பாதையில் காப்பாளர் இல்லை என்று ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
பாதுகாப்பான ரயில்பாதை (200மீ)




இந்த அடையாளம் சாலையின் குறுக்கே பாதுகாப்பான ரயில்பாதை 200 மீ தொலைவில் வருகிறது என்று குறிக்கிறது. மேலும் இந்த பாதையில் ரயில்பாதை காப்பாளர் இருக்கின்றர் என்று ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
பாதுகாப்பான ரயில்பாதை (50-100மீ)




இந்த அடையாளம் சாலையின் குறுக்கே பாதுகாப்பான ரயில்பாதை 50-100 மீ தொலைவில் வருகிறது என்று குறிக்கிறது. மேலும் இந்த பாதையில் ரயில்பாதை காப்பாளர் இருக்கின்றர் என்று ஓட்டுநர்களுக்கு தெரியப்படுத்துகிறது.
logo