பொது கவனம்


★ பாதிக்கப்பட்டவரை, செளகரியமாக இருக்க வையுங்கள். கொஞ்சமாக அவரை மிருதுவாக நகர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு மன தைரியம் கொடுங்கள். எல்லாம் சரியாகி விடும் என்று உற்சாகம் கொடுக்க வேண்டும்.

★ மயக்க நிலையில் இருந்தால், குடிக்க எதுவும் கொடுக்காதீர்கள். உள்காயம் எற்பட்டிருந்தாலும், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும் குடிக்க எதுவும் கொடுக்கக் கூடாது.

★ வாகனத்தின் முதலுதவி பெட்டியில் தேவையான துணி, பஞ்சு, கத்திரி, பேன்டேஜ் துணி, பேண்ட் எய்ட் இவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.

★ சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்தால், போலீஸ், மருத்துவமனை எனப் பல தேவை இல்லாத இடங்களுக்கு அலைய வேண்டியிருக்கும். எனவே, சாலை விபத்தில் அடிபட்டால், அதிகபட்சம் 108-க்கு அழைத்தால் மட்டும் போதுமானது எனப் பலர் நினைப்பதால்தான் காப்பாற்ற வாய்ப்பிருந்தும் சிலர் மரணிக்க நேரிடுகிறது.

★ சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை கொடுக்க காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வந்தால்தான் சிகிச்சை கொடுக்க முடியும் என, மருத்துவமனைகள் சொல்வது இல்லை.

★ ஒரு நபர் இறக்கும் தருவாயில் இருந்தால், சட்டப்படி அவருக்கு முதலில் சிகிச்சைதான் அளிக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் எல்லாம் தேவை இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

★ அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரசிகிச்சைப் பிரிவில் ஏ.ஆர் காப்பி (Accident Register Copy) இருக்கிறது. நோயாளிக்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்னர் மருத்துவமனையில் இருந்தே, போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

★ எனவே, பாதிக்கப்பட்டவருக்கு உதவினால் நமக்கு போலீஸ் கேஸ் என அலைச்சல், தேவை இல்லாத தொந்தரவுகள் வருமோ என மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.







logo