விபத்தினைத் தவிர்ப்பது எப்படி?


1. போதிய அளவு ஓய்வு இல்லாதபோது அடுத்தவரின் கட்டாயத்தின் பேரில் வாகனத்தை ஓட்டுவதல் கூடாது.

2. மருந்து, மாத்திரைகள் மற்றும் மதுபான வகைகள் அருந்தி வாகனத்தை ஓட்டக்கூடாது.

3. சிறுநீர், மலம் கழிக்க நினைத்து அதிக தூரம் வாகனத்தை ஓட்டக்கூடாது.

4. வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வரக்கூடாது.

5. ஓடும் வாகனத்திலிருந்து எந்தவொரு பொருளையும் வெளியே தூக்கி எறியக்கூடாது.

6. பயணத்தைப் பற்றிய சிந்தனை அல்லாமல் மற்றவற்றை சிந்தித்துக்கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

7. வாகனத்தினுள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மைகளைப் பொருத்தக் கூடாது.

8. வாகனத்தின் சக்கரங்கள் இலகு மண்ணில் புதைவதாக இருந்தாலும் அனைத்து சக்கரங்களும் மண்ணில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. கனரக வாகனங்கள் செல்லும் வழி தனியாக வகுக்கப்படவேண்டும்.

10. பாதுகாப்பான சாலைகள், முறையான வேகத்தடை அமைப்புகள், கண்காணிப்பு பதிவு கருவி போன்ற அதிநவீனமான விபத்து தடுப்பு நடைமுறைகள் தேவை. வேகத்தடைகளால் 35 சதவீதம் விபத்துத்துக்களைத் தடுக்கலாம்.

11. வாகனங்களின் தரம் மேம்படவேண்டும். சிறு விபத்து என்றாலும் வாகனம் அப்பளமாக நொறுங்கும் தரம் கொண்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. வாகனத்தரம் சிறப்பாக இருந்தால் விபத்துகளின் பாதிப்புகள் குறையும்.

12. இருசக்கர வாகனம் ஓட்டும்போது தரமான தலைக்கவசம் அணியவேண்டும்.

இவைகளை கடைப்பிடித்தால் ஒருவர் விபத்தினைத் தவிர்க்க இயலும்.







logo