நம்பர் பிளேட்


ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் ?

நம்பர் பிளேட்டின் அளவு :

⚾ இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

⚾ கார் மற்றும் மற்ற வாகனங்களின் பின்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.

⚾ நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

நம்பர் பிளேட்டில் எழுதப்படும் எழுத்துக்களின் அளவு :

⚾ 70 சி.சிக்கு கீழ் உள்ள இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன்புற எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் அமைந்திருக்க வேண்டும்.

⚾ 70 சி.சிக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன்புற எழுத்துக்கள் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் அமைந்திருக்க வேண்டும்.

⚾ மூன்று சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டின் எழுத்துக்கள் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

நம்பர் பிளேட்டின் நிறங்கள் :

⚾ ஒரு வண்டியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, பதிவு செய்யப்பட்ட மாநிலம், மாவட்டம் மற்றும் வழங்கப்பட்ட உரிமம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

⚾ வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைக் கொண்டிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த கொடுக்கப்பட்டிருக்கும் உரிமம் ஆகும்.

⚾ மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை கொண்டிருந்தால் அந்த வாகனத்தை உரிமையாளர் வணிக ரீதியாகவும் பயன்படுத்திக்கொள்ள (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியம்) கொடுக்கப்பட்டிருக்கும் உரிமம் ஆகும்.

⚾ கருப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற எழுத்துகளை தாங்கியிருந்தால் அந்த வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக்கொள்ளவதற்காக (ஓட்டுவதற்கு வணிக ஓட்டுநர் உரிமம் அவசியமல்ல) கொடுக்கப்பட்டிருக்கும் உரிமம் ஆகும்.

⚾ நீல நிறப் பின்னணியில் வெள்ளை நிற எழுத்துகளை (CD) தாங்கியிருந்தால் அது வெளி/ஐக்கிய நாடுகளின் தூதகர்களுக்குச் (Consular Diplomats/United Nations) சொந்தமான வாகனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமம் ஆகும்.

⚾ மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களை (CC) தாங்கியிருந்தால் அது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு (Consular Corps) சொந்தமான வாகனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமம் ஆகும்.

நம்பர் பிளேட்டில் செய்யக்கூடாதவை :

⚾ ஒரு சிலர் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் இஷ்ட தெய்வங்களின் படங்களை அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் செய்யக்கூடாது.

⚾ வாகனம் ஓட்டுபவரின் வேலை சம்பந்தப்பட்ட தகவல்களை நம்பர் பிளேட்டில் இடம் பெறாமல் இருப்பது நலம்.

⚾ இன்னும் சிலர், நம்பரை டிராகுலா போன்று பலவித ஸ்டைலிலும், சாய்வாகவும், ஒளியை பிரதிபலிக்கும் வகையிலும் எழுதி நம்பரை கண்டுபிடிக்க முடியாத வகையில் செய்யக்கூடாது.

⚾ வாகன பதிவு எண்களை, நம்பர் பிளேட்களில் அரசு விதிமுறைபடி தான் கண்டிப்பாக எழுத வேண்டும்.

⚾ விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்புபவர்களையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரையும் பிடிக்க நம்பர் பிளேட்கள் மிக முக்கியமானதாக உள்ளன.

⚾ நம்பர் பிளேட்டினை பயன்படுத்தி, மோதும் வாகனத்தின் நம்பரை வைத்து எந்த வாகனம் மோதியது என அறிந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ள முடியும்.

⚾ சாலை விதிகளை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.







logo