இருசக்கர வாகனம்


வாகனம் ஓட்டும் முறைகள்:

இருசக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து, பின் ஓட்ட வேண்டும்.

✧ வாரத்திற்கு ஒருமுறை முன்சக்கரம், பின் சக்கரத்திற்கு காற்று நிரப்புவது அவசியம்.

✧ 2,500 முதல் 3,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை, வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும்.

✧ சர்வீசின் போது, பழைய ஆயிலை எடுத்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றுவதும் அவசியம்.

✧ 15 நாட்களுக்கு ஒரு முறை வண்டியை துடைக்க வேண்டும். இதனால், வாகனத்தில் படியும், தூசு மற்றும் கரையை அகற்றலாம்.

✧ வாகனத்தை ஓட்ட துவங்கும் முன் ஆயில், சக்கரத்தில் உள்ள காற்றின் அளவு, ஹாரன் இயக்கம், பெட்ரோல் மற்றும் பிரேக் கன்ரோல் சரியாக இருக்கிறதா என சோதிக்க வேண்டும்.

✧ வாகனத்தை ஓட்டும் போது கிளெச்சைப் பிடித்துக் கொண்டு அல்லது பிரேக்கை அழுத்திக் கொண்டு ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டினால், வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும்.

✧ வாகனத்தை இயக்குவதற்கு முன், சைடு ஸ்டாண்டை எடுத்து விட வேண்டும்.

✧ மொபைலில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.

✧ சாலையின் நடுவே வாகனம் ஓட்டக்கூடாது.

✧ வாகனத்தின் சைடு கண்ணாடியைப் பார்க்காமல், இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.

✧ பகலில், வாகனத்தின் விளக்கு எரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

✧ கண்டிப்பாக, ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

✧ மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் கூடாது.


ஓட்டுநர் உரிமம் :

✧ ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி சான்றுதான் ஓட்டுநர் உரிமம்.

✧ மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சி ஓட்டுநர் உரிமம்.

✧ மேலும், ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.


வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி:

✧ போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு ஆகும். சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித்தகுதி தேவை இல்லை.

ஓட்டுநர் உரிமம் பெறும் முறை:

✧ ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச்சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும்.

✧ பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது.

✧ பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும்.


இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கவனத்திற்கு :

✧ தற்போழுது பயன்படுத்தும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை சுத்தப்படுத்தி சரிசெய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யாவிடில் கிளர்ச் போன்ற பாகங்கள் பழுதாகும்.

✧ வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும். சாலையில் செல்லும் போது சிக்னல் விழுந்தால் சடன் பிரேக் போட்டு உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.

✧ உங்கள் வாகனத்திற்கு பின்னால் வருபவர்கள் ஒலி எழுப்பினால் அந்த வாகனத்திற்கு வழிவிடுங்கள்.

✧ வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டுங்கள். வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனத்தை ஓட்டக்கூடாது.

✧ வளைவுகளில் முன் செல்லும் வண்டியை முந்தக்கூடாது. வாகனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடாது. முக்கியமாக நம் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பு இரு சக்கர வாகன (ஸ்டாண்டு) தாங்கியை எடுத்துவிட்டு ஓட்ட வேண்டும்.

✧ சாலைகளில் பள்ளங்களிலும், மேடுகளிலும், வாகனத்தை வேகமாக இயக்கிச் செல்லக் கூடாது. வேகமாக நம் வாகனத்தை ஓட்டிச் சென்றால் ஆயில் கசிவு ஏற்படலாம். பிரேக் பிடிக்காமலும் போகலாம். சில நேரங்களில் வாகனத்தின் சிறு பாகங்கள் உடைந்து விட வாய்ப்பு உண்டு. ஆதலால் நட்டு, போல்டுகளை நன்கு இறுக்கிய நிலையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும்.

✧ 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. திடீரென்று இவர்களுக்கு மயக்கமோ, நெஞ்சுவலியோ அல்லது தலை சுற்றலோ வரும் பொழுது நிலை தடுமாறி விபத்துக்குள்ளாவதற்கு வாய்ப்புள்ளது.

✧ பிரச்சனைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும்.







logo