இலகுரக வாகனம்


வாகனம் ஓட்டும் முறை:

✧ ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்களாகும். அவற்றை பொது போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் கவனத்திற்கு :

✧ ஓட்டுநர்களுக்கு அருகில் பயணிகளை அமரச் செய்து ஆட்டோவை ஓட்டக்கூடாது. மூன்று நபர்களுக்கு மேல் ஆட்டோவில் பயணிகளை ஏற்றக்கூடாது.

✧ பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது பைகள் வெளியே தொங்கிக் கொண்டு வருமாறு ஆட்டோவை ஓட்டக் கூடாது. அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லுதல் கூடாது.

✧ சீருடை பெயர் வில்லை அணியாமல் வாகனத்தை ஓட்டக் கூடாது. அனுமதி பெறாமல் வாகனத்தில் விளம்பரப்பலகை மாட்டக்கூடாது.

✧ அதிக பிரகாசமுள்ள மஞ்சள் விளக்குகளை வாகனத்தின் முன்பாக பொருத்தக் கூடாது. புகை பிடித்துக் கொண்டோ அல்லதுமது அருந்திய நிலையிலோ ஆட்டோ ஓட்டக் கூடாது. ஆட்டோக்களை சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்துதல் கூடாது.


கார் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு:

✧ கார் ஓட்டுவதற்கான சரியான நிலை, 180 டிகிரி கோணத்தில் கைகளை வைத்துக்கொண்டு ஓட்டுவதாகும். ஸ்டீயரிங் வீலின் மேற்புறத்தில் இரு கைகளையும் வைத்து ஓட்டுவது தவறு.

✧ வளைவுகளில் திரும்பும்போது ஒரே கையால் ஸ்டீயரிங் வீலை முழுவதுமாக வளைப்பது தவறு. தவிர, குறுகலான சாலையிலும், U டர்ன் போடும்போது, கைகளை ஸ்டீயரிங் வீல் முழுவதும் கொண்டு போய் பின்ன விடுவதும் தவறானது ஆகும்.

✧ இரண்டு கைகளாலும் ஸ்டீயரிங் வீலை கொஞ்சம் கொஞ்சமாக திருப்ப வேண்டும். அவசர சமயங்களில் ஒற்றை கை டிரைவிங் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தும்.

✧ ஸ்டீயரிங் வீலில் 9 மற்றும் 2 ஆகிய இடங்களில் பிடித்து ஓட்டுவது ஆபத்தை விளைவிக்கலாம். இந்த முறைதான் ஏர்பேக் விரியும்போது உங்களது கை மற்றும் தலையில் காயத்தை ஏற்படுத்திவிடும்.

✧ ஸ்டீயரிங் வீலில் கையிருக்கும்போது கையில் மொபைல்போனை எடுத்து பேசுவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவை தவறான செயல் ஆகும்.

✧ ரிவர்ஸ் எடுக்கும்போது உடலை வளைத்து பின்புறம் பார்க்க வேண்டியிருக்கும். அப்போது ஒரு கை ஸ்டீயரிங் வீல் மேலே வைத்துக் கொண்டு திருப்பினால் சவுகரியமாக இருக்கும்.

✧ இருக்கையில் அமரும்போது ஸ்டீயரிங் வீலிருந்து உடம்பை 25 செமீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டு வண்டியை ஓட்ட வேண்டும்.







logo