கனரக வாகனம்


கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி:

✇ பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கனரக வாகனம் ஓட்டும் முறை :

✇ நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு என்று அனுமதிக்கப்பட்ட வேகமாகிய 65கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனத்தை ஓட்டக் கூடாது.

✇ அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. வாகனங்களில் சரக்குகள் ஏற்றிச் செல்ல பயன்படுத்தக் கூடாது.

✇ சட்ட விரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.

✇ வாகனத்திலுள்ள ஒலிப்பானை வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது.

✇ சாலைக் குறுக்கீட்டையோ, சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

✇ மேலும், அந்த இடங்களில் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேராத முறையில் செல்ல முடியும் என்று அறிந்துகொண்ட பின்பே கடக்க வேண்டும்.

✇ உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் கூடாது.


சரக்கு வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு:

✇ ஓவர் லோடு சரக்குகள் ஏற்றக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்லக்கூடாது.

✇ அதிகப்பிரகாசம் தரும் முகப்பு விளக்குகள் பொருத்தக் கூடாது. மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டக்கூடாது.

✇ தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டக்கூடாது. கிளீனரிடம் வாகனத்தை ஓட்டச் சொல்லக்கூடாது. அதிக உயரமான சரக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லக் கூடாது (தரையிலிருந்து 380 செ.மீ. க்கு மேல் இருக்ககூடாது).

✇ பர்மிட், இன்சூரன்ஸ், தகுதிச் சான்றிதழ்களை சரி பார்க்காமல் ஓட்டக் கூடாது. சரக்குகளின் மேல் ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது.


பேருந்து ஓட்டுனர்களின் கவனத்திற்கு :

✇ அளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. புட் போர்டுகளில் பயணிகளை அனுமதிக்க கூடாது.

✇ முன் இடது இருக்கைகளில் ஓட்டுனர் பார்வையை மறைக்கும்படி பயணிகளை அமர வைக்கக்கூடாது.

✇ கால அட்டவணை பேருந்தில் இல்லாமல் இருக்கக் கூடாது. முன்னால் இருக்கும் பயணிகளிடம் பேசிக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது. இசை நாடா ஒலி இருப்பின் அதில் கவனம் செலுத்திக் கொண்டே பேருந்தை ஓட்டக் கூடாது.

✇ சீருடை, பெயர் வில்லை அணியாமல் பேருந்தை ஓட்டக் கூடாது. புகைபிடித்துக் கொண்டு பேருந்தை ஓட்டக் கூடாது. மது அருந்திய நிலையில் பேருந்தை ஓட்டக் கூடாது.


ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?

✇ ஒருவர் வாகனம் ஓட்டுவது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது ஆகும். ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.







logo