நிரந்தர உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தனி விண்ணப்பம் உண்டா?


✍ நிரந்தர உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தனி விண்ணப்பம் உள்ளது. விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தைச் செலுத்தி, பழகுனர் உரிமம் வழங்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய வாகனம் ஓட்டும் திறனும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்படும்.

✓ வாகனத்துக்குரிய பதிவுச் சான்றிதழ், இன்ஷ்யூரன்ஸ், மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவற்றை காட்ட வேண்டும். வாகனம் உங்கள் பெயரில் இல்லாதபட்சத்தில், வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து, தமது வாகனத்தை அளித்திருப்பதாக ஒரு சான்றிதழும் அவசியம் வேண்டும்.

✇ அதிகாரி, வாகனம் ஓட்டும் திறனைப் பரிசோதனை செய்து, வாகனம் ஓட்டும் விதிமுறைகள் குறித்து சில கேள்விகளைக் கேட்பார். அதற்கு சரியான பதில்களை சொன்னால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதில் தேர்ச்சிப்பெறதவர்கள், மீண்டும் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

✇ போக்குவரத்து அல்லாத வாகனப் பிரிவிற்கான நிரந்தர உரிமம் வழங்கும்போது, உங்களுடைய ஐம்பதாவது வயது வரை செல்லும் வகையில் ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ அதிகாரி அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் மீண்டும் புதுப்பிக்கப்படும்.

✓ தற்போது இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியிருந்தாலும், விண்ணப்பத்தை பதிவுசெய்யும்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு, அசல் ஆவணங்களுடன் குறித்த நேரத்தில் நேரில் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.







logo