சாலை பாதுகாப்பு கவிதைகள்


அவசரமாய் பயணிக்கையில்
அணைத்திடுங்கள் அலைபேசியை
அழைத்தாலும் மறுத்திடுங்கள்
அழைப்பது எமனாக கூட இருக்கலாம்!!


மது அருந்தி பயணம்
மாற்றிடும் உங்கள் பயணப்பாதையை
மரண வாயிலில் சேர்த்திடும்
மயக்கம் தரும் மது
தயக்கம் இன்றி கொன்றிடுமே !
மற்றவர் மகிழ்ச்சியை பறித்திடுமே!


இணைந்த கைகள்
இனிய நட்பின் அடையாளம்
இயல்பாய் நடந்திடும் போது..
இணையான வேகத்தில் இணைந்த கைகளுடன்
இருசக்கர பயணம்
இறுதி சடங்கின் முன்னோட்டம்.....


மதியினால் விதியை வெல்லலாம்
இது பழமொழி
சாலை விதிகளை மதித்திடுங்கள்
விதியை வெல்லலாம் - இது
பூவுலகின் புதுமொழி!


அன்னை தந்தை ஆருயிர்க்கும்,
அன்பில்விளைந்த காதலிக்கும்,
உண்மைபேசும் குழந்தைகட்கும்,
"உம்மா" கொடுத்து புறப்படுவான் -
உடலைதாங்கும் முதுகெலும்பாய்..!


ஆசைவாழ்க்கை ஒருபுறத்தில்;
அடிமைவாழ்க்கை மறுபுறத்தில்;
பிரளும்தலையில் மணிகணக்கில்;
விரைந்துகிடப்பான் சாலையினை -
விதியைமீறும் வேதனையில்..!


சாலைவிதிகள் அறிந்திருந்தும்,
சாகசமென்னும் போதையிலே..!
ஆளைதுரத்தும் அவனாட்டம் -
ஓசையின்றி போகுமொரு,
ஒழுக்கம்கெட்டவன் கையாலே..!.


விதிகளென்பது விளையாட்டாய்,
விழிகளைமூட நீவரமாட்டாய்.. ;
மதுவைக்குடித்து மானங்கெட்டு,
மறந்துபோகும் ஞானமும்கெட்டு -
மடிவாய்ரோட்டில் உயிரைவிட்டு..!


படியில்நின்று பயணம்செய்வான்,
பார்க்க ரோமியோ பக்கமிருப்பான்,
அக்கம்பக்கம் பார்த்து ரசித்து -
அழகை கையால்வாரிக்கொள்வான் ;
அடுத்தகணமே மோதிச்சாவான்..!


விதிகளென்பது சாலையின்மேலே,
விவேகமென்னும் வேகத்தினாலே,
முன்பின்னறிந்து வாகனமோட்டு;
முதுகெலும்பாய் நீ வாழ்ந்துக்காட்டு -
முடிந்தவரையில் அக்கறைகாட்டு..!







logo