அனைவரின் பொதுவான கவனத்திற்கு



👉சரியான ஓட்டுநர் உரிமம்(டிரைவிங் லைசென்ஸ்)வைத்திருங்கள்.

👉வாகனத்தின்RCபுக்,இன்ஸ்யூரன்ஸ்,Tax சர்டிபிகேட்டுகளை எப்போதும் வாகனத்தில் வைத்திருங்கள்.

👉விளக்கு சிக்னல்,போலீஸ் சிக்னல்களுக்கு கீழ்படிந்து ஓட்டுங்கள்.

👉அதிக வேகம் அல்லல் தரும்.வேகத்தைக் குறைத்தாலே விபத்தைத் தவிர்க்கலாம்.

👉சாலை விதிகளை மதியுங்கள்.கடைபிடியுங்கள்.

👉போக்குவரத்திற்கு இன்னல் விளைவிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்தல்,கடை போடுதல்,சாலை விபத்து ஏற்பட காரணமாகும்.எனவே சாலை போக்குவரத்தை பாதிக்கும் ஆக்கிரமிப்புகளை தயவுசெய்து செய்யாதீர்கள்.

👉நீங்கள் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டால்.என்ன நடந்தால் எனக்கு என்ன?என்று செல்லாமல் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அடிபட்டவர் உயிரைக் காப்பாற்றுங்கள்.பின் விபத்தைப் பற்றிய விவரங்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவியுங்கள்.

👉பேருந்தில் செல்லும்போது ஓட்டுனரை அதிக வேகம் செல்ல தூண்டாதீர்.அதிக வேகம் விபத்தை ஏற்படுத்தும்.விரைவான பயணமா?பாதுகாப்பான பயணமா? -நன்கு யோசியுங்கள்.

👉வாகனம் ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தைத் திருப்பாதீர்.

👉மாட்டு வண்டி,கை வண்டிகளில் இரவில் ஒளிரும் சிவப்பு விளக்கு மற்றும் ரிப்பெலக்டிவ் ஸ்டிக்கர் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.

👉போக்குவரத்து சிக்னல் போர்டுகள்,ஊர் பெயர்,ஊர்களின் வழிகாட்டி போர்டுகள் மீது போஸ்டர்கள் ஒட்டுவது தவறான செயல் ஆகும்.

👉பொதுமக்கள் வெளியே செல்லும் போது தங்கள் வசம் உங்கள் முழு விலாசம்,டெலிபோன் நெம்பர் வைத்திருப்பது எப்போதும் நல்லது.விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உங்களைப் பற்றிய தகவல்களை அறிய இது மிகவும் உதவும்.

👉சீக்கரமாகக் கிளம்பி,மெதுவாக வாகனம் ஓட்டி பாதுகாப்பாக சேருங்கள்.

👉வாகனம் ஓட்டும்போது முழுகவனமும் சாலையில் இருக்கட்டும்.

👉வாகனம் ஓட்டும்போது திரும்பி பேசுதல்,செல்போனில் பேசுதல் போன்ற கவன குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

👉குடிபோதையிலும்,போதை பொருட்களை உட்கொண்டும் வாகனம் ஓட்டுவது பேராபத்தை விளைவிக்கும்.

👉தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டாதீர்.

👉நீங்கள் வாகனம் ஓட்டுவது மற்றும் வண்டியை பார்க் செய்வது மற்ற போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்வது உங்கள் முக்கியக் கடமையாகும்.

👉இரவில் வாகனம் ஓட்டும்போது முறையாக ஹெட்லைட்டை டிம் செய்து ஓட்டுங்கள்.

👉வலதுபுறம் இண்டிகேட்டர் போட்டு கடந்து செல்ல அனுமதிப்பது தவறு மற்றும் ஆபத்தானதும் கூட.

👉நான்கு தடச் சாலையில் செல்லும்போது இடதுபுற தடத்தில் எல்லா வாகனமும் செல்ல வேண்டும்.வலதுபுறமுள்ள தடத்தை ஓவர்டேக் செய்வதற்கும் வலதுபுறம் திரும்புவதற்கும் மட்டுமே உபகோகிக்க வேண்டும்.

👉தேவையில்லாமல் ஹாரன் ஒலி எழுப்பாதீர்.நகர எல்லைக்குள்ஏர் ஹாரன்அடிக்கக் கூடாது.

👉இரயில்வே கேட்டைக் கடக்கும் போது வாகனத்தை நிறுத்தி இருபுறமும் பார்த்து கண்ணுக்கு எட்டிய தூரம் இரயில் வரவில்லை,சத்தம் கேட்கவில்லை என்று நிச்சயம் செய்தபிறகு மெதுவாக கடந்து செல்லவும்.

👉கிளைச் சாலையில் இருந்து பிரதான சாலையில் நுழையும் முன் உங்கள் வாகனத்தை நிறுத்து இருபுறமும் பார்த்து நுழையவும்.

👉போலீஸ்,தீயணைப்புப் படை,ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடந்து செல்ல அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

👉இரண்டு தடச் சாலையில் மூன்று வாகனங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கக்கூடாது.







logo