போக்குவரத்து காவல்துறை சைகைகள்


 நெரிசலான சாலை சந்திப்புகளில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறையினரால் கை சைகைகள் காண்பிக்கப்படுவதை ஓட்டுநர்கள் சந்தேகமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். அவசியம் கருதி கை சைகைகள் விபரம் பற்றி காண்போம்.


☞ போக்குவரத்துக் காவலர் இடது கையை நீட்டினால் அது பின்புறம் வரும் வண்டிகளை நிறுத்துவதற்காக என்று அறிந்துகொள்ள வேண்டும்.


☞ முன்புறம் வரும் வண்டிகளை நிறுத்துவதற்கு போக்குவரத்துக் காவலர் தனது வலது கையை மேல்நோக்கி காட்டுவார்.


☞ முன்புறம் மற்றும் பின்புறம் வரும் வண்டிகளை ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு அவர் தனது வலது கையை மேல்நோக்கியும், இடது கையை நீட்டியும் காட்டுவார்.


☞ இடமிருந்து வலது புறமாக திரும்பக்கூடிய வண்டிகளை நிறுத்துவதற்கு வலது உள்ளங்கை கீழ்புறம் இருக்குமாறு, இடது கையை நீட்டியும் காண்பிப்பார்.


☞ வலதுபுறமிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி, இடது புறமிருந்து வரும் வண்டிகளை வலதுபுறம் திருப்புவதற்கு தனது வலது உள்ளங்கையை மேல்நோக்கி காட்டியும், இடது கையை நீட்டி வலதுபுறமாக அசைப்பார்.


☞ இடது புறமிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி, வலதுபுறமிருந்து வரும் வண்டிகளை இடதுபுறம் திருப்புவதற்கு தனது இடது உள்ளங்கையை மேல்நோக்கி காட்டியும், வலது கையை நீட்டி இடதுபுறமாக அசைப்பார்.


☞ நாலாப்புறமிருந்து வரும் வண்டிகளை நிறுத்துவதற்கு அவர் தனது இரண்டு கைகளையும் மேல்நோக்கி காட்டுவார்.


☞ இடதுபுறம் நிற்கும் வண்டிகளை முன்னோக்கி போகச் செய்வதற்கு போக்குவரத்து காவலர் இடதுபுறம் பார்த்து வலது கையை மேல்நோக்கி காட்டுவார்.


☞ வலதுபுறம் நிற்கும் வண்டிகளை முன்னே போகச் செய்வதற்கு போக்குவரத்து காவலர் வலதுபுறம் பார்த்து இடது கையை மேல்நோக்கி காட்டுவார்.




☞ முன்னே நிற்கும் வண்டிகளை முன்னே வர செய்வதற்கு அவர் தனது வலது உள்ளங்கையை முன்புறமாக காட்டி அசைப்பார்.







logo